மார்க்கத்தை தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது. அவ்வாறாயின் அல்லாஹ்வை விசுவாசிக்காதவர்களுடன் போரிடுமாறு அல்லாஹ் கூறுவது ஏன்?

முதலாம் வசனம்: "இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது''. (அல் பகரா :256). - இந்த வசனமானது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள செய்வதில் நிர்ப்பந்தத்தை (வற்புருத்தலை) பிரயோகித்தலை தடை செய்தல் எனும் மார்க்கத்தின் மிகப்பெரும் இஸ்லாமிய அடிப்படையொன்றை நிறுவுகிறது. அதே வேளை இரண்டாவது வசனமானது : ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களோடு போராடுங்குள்'' என்று குறிப்பிடுகிறது. (அத்தவ்பா : 29). குறிப்பு: 'இந்த வசனத்தை முழுமையாக படிப்பதன் மூலம் இந்த வசனம் குறிப்பிட வந்த விடயத்தை புரிந்து கொள்ளலாம்' இந்த வசனம் குறிப்பிடும் கருத்து பிரத்தியேகமானதே தவிர பொதுவானதல்ல. அதாவது இஸ்லாத்தை எதிர்த்து, இஸ்லாமிய பிரச்சாரத்தை பிறர் ஏற்றுக்கொள்வதை தடுப்பவர்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த வகையில் இரண்டு வசனங்களுக்குமிடையில் உண்மையில் எவ்வித முரண்பாடுமில்லை. تقدم تقدم

PDF

Wait a moment

AI Chatbot
Offline