உலக வாழ்வின் அடிப்படை இலக்கு யாது?

உண்மையில் உலக வாழ்வின் அடிப்படை இலக்கு தற்செயலாக உணர்வு பிரவாகிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பது அல்ல. மாறாக அல்லாஹ்வை –கடவுளை- அறிந்து அவனுக்கு வழிப்படுவதன் ஊடாக அடைந்து கொள்ளும் ஆழமான அக நிம்மதியை எய்துகொள்வதாகும்.

இந்த இறை இலக்கை எய்து கொள்வதே –நித்திய சுகத்தையும் யதார்த்தமான நிரந்த மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ள காரணமாக அமையும். ஆக, இதுவே எங்களது அடிப்படை குறிக்கோளாக இருந்தால் இந்த இலக்கை அடைந்து கொள்வதில் ஏற்படும் எந்தக் கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் இருப்பினும் அவற்றை எதிர்கொள்வது அற்பமாகிவிடும்.

வாழ்வில் எந்தத் துன்பத்தையோ கஷ்டத்தையோ எதிர்கொள்ளாத ஒரு மனிதனின் ஆடம்பரமான வாழ்வு குறித்து சிந்திப்போமானால் இவ்வாறான ஒரு மனிதன் தனது ஆடம்பர வாழ்வின் காரணமாக அல்லாஹ்வை மறந்து அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தவனாவான். இவ்வாறான ஒரு மனிதனை, கஷ்டம் மற்றும் துன்பம் நிறைந்த அனுபவங்கள் அல்லாஹ்வின்பால் இட்டுச்சென்று தனது வாழ்வின் இலக்கை உண்மையில் அடைந்து கொண்ட ஒரு மனிதனோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இருவரும் சமமாவார்களா? இஸ்லாமிய போதனைகளின் கண்ணோட்டத்தில் துன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வின் பால் சென்ற மனிதன், எவ்விதக் கஷ்டத்தையும் அனுபவிக்காது இவ்வுலகின் சுகபோகங்களில் திழைத்து, சுகபோகமான வாழ்வு அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்தி இருந்தவனை விட சிறந்தவனாவான்.

எல்லா மனிதர்களும் இவ்வுலக வாழ்வில் ஏதோ ஒரு இலக்கை அல்லது நோக்கத்தை அடைந்து கொள்ளவே பாடுபடுகின்றனர். அனேகமாக அவர்களின் இலக்கானது அவர்களிடம் காணப்படுகின்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும். நாம் மார்க்கத்தில் கண்டு அறிவியலில் காண முடியாமல் இருக்கின்ற ஒன்றுதான், மனிதன் எதற்காக முயற்சி செய்கிறான் என்பதற்கான காரணமாகும்.

மதமானது மனிதன் படைக்கப்பட்டு உயிர் வாழ்க்கை உருவாக்கப்பட்டதிற்கான காரணத்தை மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே வேளை அறிவியல் என்பது ஒரு சாதனமே, அதனிடம் ஒரு மனிதனின் எண்ணம் மற்றும் நோக்கம் போன்றவற்றிற்கான எவ்வித விளக்கமும் கிடையாது.

மதத்தை ஆதரிப்பதற்கு அல்லது அதில் ஈடுபாடுகாட்டுவதில் மனிதர்கள் அதிகம் பயப்படுவதற்கான காரணம் வாழ்வின் சுகங்ககளை அனுபவிப்பதற்கு அது தடையாக அமைந்து விடும் என்பதினாலாகும். மதம் என்பது உண்மையில் மகிழ்ச்சியான விடயங்களிருந்து அவசியம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதும், அது அனுமதித்தவை தவிர அனைத்தும் தடைசெய்யயப்பட்டது என்பது மக்களிடம் பரவலாக காணப்படும் நம்பிக்கையாகும்.

இந்த தவறான நம்பிக்கையில் வீழ்ந்துள்ள அதிகமானோர் மதத்தைப் புறக்கணித்து விரண்டோடுகின்றனர். இப்பிழையான கருத்தியலை சரிபடுத்தவே இஸ்லாமிய மார்க்கம் வந்தது, அது அடிப்படையில் மனிதனுக்கு அனைத்தும் அனுமதிக்கப்பட்டதே என்றும் தடைசெய்யப்பட்டவைகளும் வரையறைகளுக்குட்பட்ட விடயங்களும் சில அம்சங்களே என்றும் இதில் எவரும் முரண்படுவதற்கில்லை என்பதாகவும் குறிப்பிட்டது.

ஆன்மா மற்றும் உடல் பிறர் உரிமைகள் ஆகியவற்றிற்கிடையில் சமநிலை பேணுமாறு தூண்டுவது போன்று சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து வாழுமாறும் தனிமனிதனுக்கு அழைப்பு விடுக்கிறது.

மதத்தை துறந்து வாழும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக தீய மற்றும் மோசமான மனித நடத்தையுடையோரை கையாழ்வது பற்றியதாகும். இவ்வாறான சமூகங்களில் நெறிதவறியோரை தடுக்க மிகக் கடுமையான தண்டனைகளை விதிப்பதை மட்டுமே உன்னால் காண முடியும்.

"உங்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதை சோதிக்கவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்".(அல்முல்க் :2). تقدم

PDF

Wait a moment

AI Chatbot
Offline