அல்குர்ஆன் முஃமின்களை -இறைவிசுவாசிகளை அல்லாஹ் விரும்புவதாகவும் இறைநிராகரிப்பாளர்களை வெறுப்பதாகவும் மீண்டும் மீண்டும் ஏன் குறிப்பிடுகிறது? அவர்கள் அனைவரும் அவனின் அடியார்களல்லவா?

அல்லாஹ் தனது அடியார்கள் அனைவருக்கும் மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுத்துள்ளான். எனவே அவன் இறைநிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அத்துடன் இறை நிராகரிப்பு மற்றும் பூமியில் குழப்பம் விழைவித்தல் போன்ற மனிதன் செல்லும் பிழையான நடத்தையையும் அவன் விரும்ப மாட்டான்.

"அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர் : 7). تقدم

நீங்கள் களவெடுத்தாலும் விபச்சரம் செய்தாலும் கொலை செய்தாலும் இந்தப் பூமியில் குழப்பம் விளைவித்தாலும், நீங்கள் அனைவரும் என்னைப்பொருத்தவரை நல்ல அடியாரைப் போன்றோர், உங்கள் அனைவரையும் நினைத்து நான் பெருமைப் படுகிறேன் என்று பிள்ளைகளுக்கு முன்னால் திரும்பத் திரும்பச் சொல்லும் தந்தையைப் பற்றி நாம் என்ன சொல்வது? எளிமையாகச் சொன்னால், இந்த தந்தை ஷைத்தானைப் போன்றவர், பூமியில் குழப்பங்கள் மற்றும் தீமைகளை செய்வதற்கு குழந்தைகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல முடியும்.

PDF

Wait a moment

AI Chatbot
Offline