இறைவன் (அல்லாஹ்) தன்னை சில போது மிகப்பெரும் மன்னிப்பாளன், மகா கருணையாளன் என்றும், சில சமயங்களில் கடுமையாக தண்டிப்பவன் என்றும் விவரிப்பது ஏன்?

மனித இயல்பையும், பலவீனத்தையும் கருத்தில் கொண்டு, விடாப்பிடியாக இன்றி பாவம் செய்வோரை அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால் இறைவன் மன்னிப்பவனாகவும் அவர்களுடன் இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறான். இதில் இறைவனை சவாலுக்குட்படுத்துவது என்பது கிடையாது. இருப்பினும், இறைஇருப்பை மறுத்து, தன்னை சிலைகள் அல்லது விலங்குகளின் வடிவில் சித்தரிப்போரை, அல்லது மனந்திருந்தாமல் பாவச்செயல்களில் விடாப்பிடியாக நிலைத் திருப்பவர்களை கடுமையாக தண்டிப்பான். ஒருவன் மிருகத்தை அவமதித்தால், யாரும் அவனை குறை கூற மாட்டார்கள், ஆனால் அவர்கள் பெற்றோரை அவமதித்தால், அவர்கள் கடுமையாக கண்டனத்துக்கு ஆளாகுவார். அப்படியாயின், இந்த சமன்பாட்டை அவமதிப்பை படைப்பாளனான இறைவன் விவகாரத்தில் பிரயோகித்தால்;? அது இதை விட மிகப்பெரும் குற்றமல்லவா?! ஆகையினால் நாம் பாவத்தை சிறியதாக கருதக்கூடாது. மாறாக யாருக்கு மாறு செய்கிறோம் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும்.

PDF

Wait a moment

AI Chatbot
Offline