இறைவன் இஸ்லாத்தில் உள்ள தனது அடியார்களை நேசிக்கிறான், எனவே அவன் அவர்களை தனிமனிதத்துவ (Individualism) வழிமுறையை பின்பற்ற ஏன் அனுமதிக்கவில்லை ? (தனிமனித நலன்களைப் பாதுகாப்பதை ஒரு அடிப்படை விஷயமாக தனிமனிதவாதம் கருதுகிறது, அதே நேரத்தில் சமூகம் அல்லது அரசாங்கம் போன்றவற்றால் தனிநபரின் நலன்களில் எந்தவொரு வெளிப்புற தலையீட்டையும் அது எதிர்க்கிறது). تقدم في رقم 1857

அல் குர்ஆனில், இறைவனின் கருணையையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் குறிக்கும் பல வசனங்கள் உள்ளன. இருப்பினும், இறைவன் தம்முடைய அடியானிடம் அன்பு செலுத்துவது மக்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டிக்கொள்வது போன்றது அல்ல. ஏனென்றால் மனித அளவுகோளின் படி ஒரு காதலன் தான் இழந்த தேவையை காதலியிடமே பெற்றுக்கொள்கிறான். ஆனால் அல்லாஹ், எம்மில் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் நம்மீது கொண்ட அன்பானது பாசமும் அருளுமாகும். பலமானவன் பலவீனமானவனை விரும்புவது, வசதி படைத்தவன் ஏழைகள் மீது நிறைந்த அன்பு காட்டுவது, ஒரு பலசாலி ஆதரவற்றவரிடம் அன்பு காட்டுவது போன்ற நிலைக்கு ஒப்பானதாகும்.

எமது குழந்தைகளை நேசிக்கிறோம் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்குவோமா? எமது குழந்தைகளை நாம் நேசிக்கிறோம் என்பதனால் அவர்களை யன்னலினூடகாப் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதையோ, அல்லது திறந்த மின்னோட்டமுள்ள கம்பிகளைப் பிடித்து விளையாடவோ அனுமதிப்போமா?

நாட்டின் நலன்கள், சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், மதக் கருத்துகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, தனி நபரை முதன்மையாகக் கவனத்தில் கொண்டு, தனிப்பட்ட நன்மை மற்றும் மகிழ்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனிநபர் முடிவுகள் எடுக்க முடியாது. அத்துடன் ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கும், விரும்பியதைச் செய்வதற்கும், ஆடை அணிந்து கொள்வதற்கும், பாதை பொதுவானது என்று சாக்குப் போக்கு கூறி அவர் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளும் இப்போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவர் ஒரு வீட்டில் அவரின் ஏனைய பல நபர்களுடன் கூட்டாக –ஒன்றாக- வசிக்கிறார் என்றால், அந்த வீடு அனைவருக்கும் சொந்தமானது என்ற அடிப்படையில், அந்த வீட்டின் அறையொன்றை தனது இயற்கைத் தேவைக்காக பயன்படுத்துவது போன்ற தகாத நடத்தையில் ஈடுபடுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறான ஒரு வீட்டில் வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாது வாழ்வதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா? ஆகவே கட்டற்ற சுதந்திரத்தைப் பெற்ற மனிதன் ஒரு அசிங்கமான மனிதனாக மாறி விடுகிறான். இவ்வாறான சுந்திரத்தித்தை அனுபவிப்பதற்கு அவனால் ஒரு போதும் முடியாது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

தனிமனிதனின் அதிகாரம் அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், தனிமனிதத்துவம் (Individualism ) என்பது கூட்டு அடையாளத்திற்கு மாற்று அடையாளமாக இருக்க முடியாது. சமூகத்தின் உறுப்பினர்கள் என்போர் பல படித்தரங்களை உடையயோர் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்து இருப்பதுடன், ஒருவர் மற்றவரில் தேவையுடையோராகவும் உள்ளனர். அந்த வகையில சமூக உறுப்பினர்களில் சிலர் இராணுவ வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற பாத்திரங்களை வகிக்கின்றனர். இவர்களில் எவரேனும் தங்கள் சொந்த மகிழ்ச்சியை அடைவதை மாத்திரம் பிரதானமக் கொண்டு மற்றவர்களை புறக்கணித்து நடக்க முடியுமா?

தனிநபர்கள் தங்கள் உணர்ச்சியை கட்டவிழ்த்துவிடும் போது, அவர்கள் அதற்கு அடிமைகளாக மாறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து அதனை மிகைக்கும் எஜமானர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். அது மாத்திரமின்றி மனிதர்கள் தங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் புத்திசாலியாகவும், பகுத்தறிவு உள்ளவராகவும், திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். இதன் மூலம் உணர்ச்சியை முடக்கி செயலிழக்கச் செய்திட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக ஆன்மீக உயர்வின் பால் சரியான வழிமுறையினூடாக இதனை வழிப்படுத்துவதே இதன் உயர் குறிக்கோளாகும்.

தனது பிள்ளைகளுக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், எதிர்காலத்தில் கல்வி ரீதியாக உயர் அடைவொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பிள்ளைகள் படிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஒரு தந்தை வற்புறுத்தின், இவ்வாறான ஒரு தந்தையை கொடுமை நிறைந்த தந்தையாக கருதுவோமா? இல்லை என்பதே இதற்காகான பதிலாகும. அதே போல் ஒரு மனிதன் தான் நினைத்த விதத்தில் தான்றோண்டித்தனமாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இவ்வுலகில் வாழ முடியாது என்பதே யதார்த்தமாகும்.

PDF

Wait a moment

AI Chatbot
Offline